Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிளாமரைத் தவிர்க்கும் விஜய், அஜித் நடிகை

Webdunia
திங்கள், 3 ஜூலை 2017 (18:01 IST)
விஜய், அஜித்துடன் நடித்த அக்ஷரா கவுடா, கிளாமர் இமேஜைத் தவிர்க்க கஷ்டப்படுகிறார்.
 


 

விஜய்யின் `துப்பாக்கி’ படம் மூலம் அறிமுகமான அக்ஷரா கவுடா, பிறகு அஜித்தின் `ஆரம்பம்' படத்தில் நடித்ததன் மூலம் `ஸ்டைலிஸ் தமிழச்சி' என அழைக்கப்பட்டார். தொடர்ந்து ‘போகன்’ படத்தில் ஜெயம் ரவிக்கு துணையாக போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். தற்போது தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தமிழ் சினிமாவில் தன்னுடைய கவர்ச்சி இமேஜை உடைக்க கடினமாக இருப்பதாகவும், மேலும் இயக்குனர்கள் கவர்ச்சியான பாத்திரங்களுக்காக மட்டும் தன்னை அணுகுகிறார்கள் என்றும், தான் இந்த மாதிரியான பாத்திரங்களில் மட்டும் நடிப்பேன் என்று மக்கள் நினைப்பது தனக்கு வருத்தமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

“இதனால்தான் ஒரு வருடமாக எந்தப் படத்திலும் நடிக்க ஒத்துக்கொள்ளாமல், நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்காக காத்துக் கொண்டிருந்தேன். என்னால் நல்ல நாயகியாகவும் நடிக்க இயலும். எனவே, அப்படிப்பட்ட படங்களில் நடிக்க இயக்குனர்கள் என்னை அணுகுவார்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்” என்கிறார் ஸ்டைலிஷ் தமிழச்சி அக்ஷரா கவுடா.
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல் முதலாக அந்த ஜானரில் படம் பண்ணியுள்ளேன்… இடிமுழக்கம் குறித்து சீனு ராமசாமி பகிர்ந்த தகவல்!

திருமண மேடையில் நான் பட்ட அவமானம்… ஆதங்கத்தை வெளிப்படுத்திய ஷகீலா!

‘ஒத்த ரூபாயும் தரேன்’ மட்டும் இல்ல.. இன்னொரு பழைய பாட்டும் இருக்காம்.. ‘குட் பேட் அக்லி’ சர்ப்ரைஸ்!

‘என்னைப் பாடவேண்டாம் என்று சொன்னார்கள்… ஆனால் நான் பாடும்போது அழ ஆரம்பித்துவிட்டார்கள்’ – இளையராஜா பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!

அஜித்க்கு வைக்கப்பட்ட பிரம்மாண்ட கட் அவுட் சரிந்து விபத்து! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்