Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாஸ்டர்’ தயாரிப்பாளரின் அடுத்த படத்தை இயக்கும் அஜித் பட இயக்குனர்!

Webdunia
ஞாயிறு, 14 பிப்ரவரி 2021 (15:17 IST)
’மாஸ்டர்’ தயாரிப்பாளரின் அடுத்த படத்தை இயக்கும் அஜித் பட இயக்குனர்!
தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ சமீபத்தில் அழகிய கண்ணே என்ற திரைப்படத்தை தயாரிப்பதற்கான பூஜையைச் செய்தார் என்பதை பார்த்தோம் 
 
விஜயகுமார் என்பவர் இயக்கும் இந்த படத்தில் பட்டிமன்ற பேச்சாளர் லியோனி மகன் சிவகுமார் நாயகனாகவும் சஞ்சிதா ஷெட்டி நாயகியாக நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது 
 
இந்த நிலையில் மாஸ்டர் தயாரிப்பாளர் சேவியர் மற்றொரு படத்தையும் தயாரிக்க உள்ளார் இந்த படத்தில் அவரது மருமகனும் அதர்வா முரளியின் சகோதரருமான ஆகாஷ் முரளி ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்த படத்தை விஷ்ணுவர்தன் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
அஜித் நடித்த ஆரம்பம், பில்லா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் தான் இந்த விஷ்ணுவர்த்தன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும் தனது மருமகனை தமிழ் திரையுலகில் ஒரு ஹீரோவாக்கும் முயற்சியில் சேவியர் பிரிட்டோ ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஓடிடியிலும் கலக்கும் துல்கர் சல்மானினின் லக்கி பாஸ்கர்.. டிரண்ட்டிங்கில் நம்பர் 1!

நெட்பிளிக்ஸ் நெருக்குதலால்தான் ‘விடாமுயற்சி’ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதா?

9 மொழிகளில் உருவாகும் சல்மான் கான் & அட்லி இணையும் படம்… பட்ஜெட் இவ்வளவா?

சிம்பு 50 படத்தை இயக்கப் போவது யார் தெரியுமா?... கடைசி நேரத்தில் மாறும் பெயர்!

விடுதலை மூன்றாம் பாகமும் இருக்கா?... ரசிகர்களுக்கு வெற்றிமாறன் கொடுக்கப் போகும் சர்ப்ரைஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments