Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னை “தல” என்று அழைக்க வேண்டாம்! – ரசிகர்களுக்கு அஜித் வேண்டுகோள்!

Webdunia
புதன், 1 டிசம்பர் 2021 (14:52 IST)
நடிகர் அஜித்குமார் தன்னை ரசிகர்கள் தல என அழைக்க வேண்டாம் என கூறியுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் அஜித்குமார் நடித்துள்ள வலிமை படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் அஜித் ரசிகர்களிடையே அது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இன்று வலிமை படத்தின் இரண்டாவது பாடலும் வெளியாக உள்ளது. இந்நிலையில் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தல அஜித் என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வந்தனர்.

கடந்த பல ஆண்டுகளாகவே அஜித்குமாரை “தல” என்றே குறிப்பிட்டு வரும் அஜித் ரசிகர்கள், ஒவ்வொரு படம் வெளியாகும்போதும் “தல” என்ற அடைமொழியையே ட்ரெண்ட் செய்து வந்தனர். இந்நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அஜித்குமார்.

அதில் “மதிப்பிற்குரிய ஊடகங்கள், பொதுமக்கள் மற்றும் ரசிகர்களுக்கு.. என்னை பற்றி ஏதாவது எழுதும்போது எனது பெயரை அஜித், அஜித்குமார் அல்லது ஏ.கே என்று குறிப்பிடுங்கள். எனது பெயர் முன்னால் “தல” போன்ற வார்த்தைகளை சேர்க்க வேண்டாம். உங்கள் அனைவரது வாழ்விலும் ஆரோக்கியமும், மகிழ்ச்சியும், மன அமைதியும் நிலவட்டும்” என தெரிவித்துள்ளார். அஜித்தின் இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எனக்கும் பொண்ணு கொடுக்க ஆள் இருக்குது: நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்ட பிக்பாஸ் பிரதீப்..!

அன்பு, தியாகம், அர்ப்பணிப்பு, ஒற்றுமை .. பக்ரீத் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்த விஜய்..!

கோல்டி கேங் என்னோடு இருக்காங்க.. சல்மான்கானை கொல்வேன்! – மிரட்டல் விடுத்த யூட்யூபர் கைது!

கைவிடப்படுகிறது ‘தளபதி 69’? விஜய் எடுக்கப்போகும் முடிவு! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

புஷ்பா 2 ஒத்தி வைப்பால் ஆகஸ்ட் 15 ரிலீஸுக்கு துண்டுபோடும் படங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments