Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரியாணி விருந்தில் வீழ்ந்த அஜித் வில்லன்

பிரியாணி விருந்தில் வீழ்ந்த அஜித் வில்லன்
, செவ்வாய், 1 செப்டம்பர் 2015 (20:36 IST)
அஜித் படத்தில் யார் நடித்தாலும் 200 பக்க நோட் வாங்கி அஜித் நாமம் ஜெபிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. அஜித்தின் அன்பும் அரவணைப்பும் அப்படி.
 

 
முக்கியமாக படத்தில் அஜித்துடன் மோதும் வில்லன் நடிகர்கள் பாடுகொண்டாட்டம்தான். ஸ்பெஷல் கவனிப்பு இருக்கும் அவர்களுக்கு.
 
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படத்தில் கபீர் கான் முக்கியமான வில்லன். அவர் போர்ஷன் எடுக்கப்பட்டுவிட்டது. வழக்கம்போல் அஜித்தை புகழந்துவிட்டு பிளைட் ஏறிவிட்டார் அவர். அடுத்து ராகுல் தேவ்.
 
இவரும் படத்தில் வில்லன்தான். இவருக்கு சமீபத்தில் அஜித்தும் சிவாவும் பிரியாணி விருந்து வைத்தார்கள். அஜித்தின் பிரியாணியில் வெறும் கறி பீஸ் மட்டும் இருக்காதே, விருந்தோம்பலும் மணக்க மணக்க இருக்குமே.
 
அஜித்தும் சிவாவும் வைத்த விருந்து சூப்பர் என்று புகழ்பாடித் திரிகிறார்; ராகுல் தேவ்.
 
கோடிகளில் சம்பளம் வாங்குகிறவர்கள் எப்படி ஒரு பிரியாணிக்கு பலியாகிறார்கள் என்பதுதான் புரியவே இல்லை.

Share this Story:

Follow Webdunia tamil