Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘கடவுளே அஜித்தே’ புகழ்பாடிகளுக்காக வருகிறது விடாமுயற்சி டீசர்!

vinoth
வியாழன், 7 நவம்பர் 2024 (08:43 IST)
அஜித், இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி மற்றும் ஆதிக் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ஆகிய திரைப்படங்களில்  நடித்து  வருகிறார். விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் சில மாதங்களாக லைகா நிறுவனத்தின் பொருளாதார பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் தொடங்கி நிறைவடைந்துள்ளது.

படத்தில் அஜித்தோடு, அர்ஜுன், ஆர்வ, த்ரிஷா, ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற அனிருத் இசையமைக்கிறார். படத்தின் ரிலீஸ் தேதி குறித்த பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ள போதும், இதுவரை படக்குழு உறுதியாக ரிலீஸ் தேதியை அறிவிக்கவில்லை.

இந்நிலையில் நாளுக்கு நாள் அதிகமாகி வரும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதற்காக டீசர் நவம்பர் 10 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸாகவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் கிளிக்ஸ்… வைரல் ஆல்பம்!

ரித்து வர்மாவின் வெக்கேஷன் mode க்ளிக்ஸ்!

அமீர்கானின் ‘சித்தாரா ஜமீன் பார்’ படத்தின் தமிழ் டிரைலர் ரிலீஸ்!

துருவ நட்சத்திரம் ரிலீஸாகும்வரை வேறு எந்த படமும் கிடையாது… கௌதம் மேனன் உறுதி!

அழகுக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்தேனா?... பத்திரிக்கையாளரின் கேள்விக்குப் பதிலளித்த அதுல்யா ரவி!

அடுத்த கட்டுரையில்
Show comments