எகிறும் செலவு… அஸர்பைஜானில் இருந்து ஐதராபாத்துக்குத் தாவும் விடாமுயற்சி படக்குழு!

vinoth
திங்கள், 8 ஜூலை 2024 (08:21 IST)
அஜித், இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி மற்றும் ஆதிக் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ஆகிய திரைப்படங்களில்  நடித்து  வருகிறார். விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களாக லைகா நிறுவனத்தின் பொருளாதார பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் ஜூன் 20 ஆம் தேதி மீண்டும் அஸர்பைஜானில் தொடங்கியது.

அங்கு சில ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் இப்போது அஜித் மற்றும் த்ரிஷா ஆகியோர் சென்னைக்குத் திரும்பிவிட்டனர். அங்கு இப்போது மகிழ் திருமேனி மற்ற நடிகர்களை வைத்து வேறு சில காட்சிகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் இன்னும் சில நாட்களில் அங்கிருந்து கிளம்பி ஐதராபாத்தில் செட் அமைத்து மீதமுள்ளக் காட்சிகளை படமாக்க உள்ளார்களாம்.

அஸர்பைஜானில் படப்பிடிப்பு நடத்துவதால் செலவு எக்கச்சக்கமாக எகிறுகிறதாம். அதனால்தான் வெளிப்புற காட்சிகளை அங்கு படமாக்கிவிட்டு உட்புறக் காட்சிகளை எல்லாம்  ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் செட் அமைத்து படமாக்க உள்ளார்களாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அபிஷேக் பச்சனுடனான பிரிவு! வேறொரு திருமணம்.. கரீஷ்மா கபூர் முதலிரவில் நடந்த மோசமான சம்பவம்

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்.. விஜய், ரஜினிக்கு செஞ்சது போதாதா?

‘அஞ்சான்’ படத்தை கிண்டலடித்த ஆர்ஜே பாலாஜி.. இப்ப வம்புக்கிழுத்த லிங்குசாமி

பிக் பாஸ் 9: ஆதிரை மீண்டும் வருகை; இந்த வாரம் எவிக்சன் இல்லையா?

தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா நன்றி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments