Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹிட்ஸ்களை அள்ளும் அஜித்தின் வேதாளம் தெறிமாஸ் டீஸர்

ஹிட்ஸ்களை அள்ளும் அஜித்தின் வேதாளம் தெறிமாஸ் டீஸர்
, வியாழன், 8 அக்டோபர் 2015 (09:36 IST)
லேட்டா வந்தாலென்ன, லேட்டஸ்டாக போட்டு தாக்கிட்டாங்களே மச்சான் என்று ஒவ்வொரு அஜித் ரசிகரும் உற்சாகத்தில் இருக்கின்றனர்.


 

 
அக்டோபர் 1 வெளியாவதாகச் சொன்ன வேதாளம் டீஸர், நேற்றிரவு வெளியானது.
 
சிவா அஜித்தை வைத்து கிராமத்துப் பின்னணியில் வீரம் படத்தை எடுத்தவர். வேதாளம் குறித்து முதலில் வந்த செய்திகளும் சென்டிமெண்டாகவே இருந்தன. அஜித்தின் தங்கையாக லட்சுமி மேனன் நடிக்கிறார், அஜித் அவரை அழைத்துக் கொண்டு கல்லூரிக்கு செல்கிறார் என.
 
ஆனால், படத்தின், வேதாளம் என்ற பெயரும், அஜித்தின் சம்மர்கட் கெட்டப்பும், படத்தின் கலரை மாற்றின. நேற்று நள்ளிரவு வெளியான டீஸர் மொத்தத்தையும் மாற்றியுள்ளது.
 
டீஸர் நெடுக ஒரே ஆக்ஷன் அதகளம். விமானமும், துப்பாக்கியுமெல்லாம் சர்வசாதாரணமாக வந்து போகிறது. போதாததற்கு, தெறிக்கவிடலாமா என்று அஜித் கேட்கும் வசனம் வேறு ரசிகர்களை உசுப்பேற்றுகிறது.
 
அஜித் படங்களில் இந்த டீஸர்தான் தெறிமாஸ் என்கிறார்கள் ரசிகர்கள். டீஸர் வெளியான ஒரு மணி நேரத்தில் நான்கு லட்சம் பேர் டீஸரை பார்த்துள்ளனர்.
 
இப்படியே போனால் ஐ, புலி படங்களின் டீஸருக்கு கிடைத்த ஹிட்ஸை வேதாளம் வேகமாக கடந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.

Share this Story:

Follow Webdunia tamil