Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் அஜித் இரங்கல்.. தொலைபேசியில் பிரேமலதாவுக்கு ஆறுதல்..!

Webdunia
வெள்ளி, 29 டிசம்பர் 2023 (13:43 IST)
கேப்டன் விஜயகாந்த் நேற்று காலமான நிலையில் தற்போது துபாயில் இருக்கும் நடிகர் அஜித் தொலைபேசி மூலம் பிரேமலதாவுக்கு ஆறுதல் கூறி விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய்  உட்பட பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். ஏராளமான திரையுலக பிரபலங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ’விடாமுயற்சி’ படப்பிடிப்பிற்கு அஜர்பைஜான் சென்ற அஜித் தற்போது துபாயில் இருக்கிறார். அங்கிருந்து மீண்டும் அவர் அஜர்பைஜானுக்கு படப்பிடிப்புக்கு செல்ல உள்ளார்

இந்த நிலையில் விஜயகாந்த் மறைவு குறித்து கேள்விப்பட்டவுடன் அஜித் தொலைபேசியில் பிரேமலதா விஜயகாந்த் அவர்களை தொடர்பு கொண்டு  தான் துபாயில் இருப்பதால் நேரில் இறுதி சடங்கில் பங்கேற்க முடியவில்லை என்று வேதனையுடன் தெரிவித்தார். மேலும் விஜயகாந்த் மறைவுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக  அஜித் கூறியதோடு பிரேமலதா மற்றும் சுதீஷுக்கு ஆறுதல் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாகுபலியை கட்டப்பா கொல்லாமல் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?... ராணா டகுபடியின் டைமிங் கமெண்ட்!

30 ஆண்டுகள் நிறைவு… மீண்டும் ரிலீஸாகும் The GOAT பாட்ஷா!

நான் ரஜினி சார்க்கு எழுதிய கதையே வேறு… லோகேஷ் பகிர்ந்த சீக்ரெட்!

யாராவது 4 நாள் பிறந்தநாளை கொண்டாடுவார்களா? சூர்யா குறித்து வரும் செய்தி உண்மையா?

'சிறகடிக்க ஆசை’ நாயகியுடன் சிம்புவுக்கு திருமணமா? ஒரு வாரத்திற்கு முந்தைய செய்தி வதந்தியாக வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments