Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தீபாவளிக்கு வெளிவரும் அஜீத் படம் - ஏ.எம்.ரத்னம் உறுதி

தீபாவளிக்கு வெளிவரும் அஜீத் படம் - ஏ.எம்.ரத்னம் உறுதி
, வெள்ளி, 7 ஆகஸ்ட் 2015 (10:40 IST)
சிவா இயக்கத்தில் அஜீத் நடித்துவரும் படம் தீபாவளிக்கு வெளியாகிறது. அதனை படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் உறுதி செய்தார்.
அஜித், ஸ்ருதி, லட்சுமி மேனன், கபீர் சிங் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொல்கத்தா பகுதிகளில் நடந்தது. பாடல் காட்சியை இத்தாலியில் படமாக்கினர். அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்குகிறது.
 
படப்பிடிப்பு இன்னும் நீண்டு கொண்டு போவதால் படம் தீபாவளிக்கு வெளிவருமா என்ற சந்தேகம் எழுந்தது. அதனை ரத்னம் மறுத்துள்ளார். கொல்கத்தா ஷெட்யூலுடன் 65 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. படம் கண்டிப்பாக தீபாவளிக்கு வெளிவரும் என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil