Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமுதமா அஜீத் பிரியாணியா?

அமுதமா அஜீத் பிரியாணியா?
, ஞாயிறு, 24 மே 2015 (13:34 IST)
பாற்கடலை அசுரர்களும், தேவர்களும் கடைந்தபோது, சாகாவரம் தரும் அமுதம் கிடைத்ததாக புராணம் கூறுகிறது. அந்த அமுதுக்குகூட இப்படியொரு பாராட்டும் வரவேற்பும் புகழுரையும் வரலாற்றில் கிடைத்திருக்காது.
 
அஜீத் எப்போதாவது படப்பிடிப்பு தளத்தில் பிரியாணி செய்வது உண்டு. அது அவரது தொழிலல்ல. எப்போதாவது ஒருமுறை செய்வது. அதை வைத்து அஜீத்தை பிரபல சமையல் நிபுணராக்கி எழுதாதவர்கள் குறைவு. 

 
அஜீத்தின் புதிய படத்தில் ஸ்ருதி நடித்து வருகிறார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், அஜித் ஒரு அற்புதமான மனிதர் மட்டும் அல்ல. அவர் திறமையான சமையல் நிபுணரும்கூட. அவருடன் இந்த படத்தில் நடிப்பது ஒரு அழகான அனுபவம் என்று கூறியுள்ளார்.
 
இதை வைத்து, அஜீத் ஸ்ருதிக்கு பிரியாணி செய்து தந்ததாகவும், அப்படியொரு பிரியாணியை வாழ்நாளில் சாப்பிட்டதில்லை என்று ஸ்ருதி தூக்கத்திலும் புலம்புவதாகவும் சிலர் தமுக்கடிக்கின்றனர். இந்தப் பக்கம் ஆர்யா பிரியாணி, அந்தப் பக்கம் அஜீத் பிரியாணி.
 
சினிமா நட்சத்திரங்களுக்கு யாராவது பிரியாணியில் கைவிஷம் வைத்திருக்கிறார்களா?
 

Share this Story:

Follow Webdunia tamil