துபாயில் நடக்கும் 24H கார் ரேஸ் தொடங்கிய நிலையில் அஜித்குமார் எண்ட்ரிக்கு ஆலுமா டோலுமா பாடல் ஒலித்த வீடியோவை அனிருத் பகிர்ந்துள்ளார்.
துபாயில் நடைபெறும் சர்வதேச நாடுகளை சேர்ந்த கார் ரேஸ் வீரர்கள் பங்கேற்கும் 24H கார் ரேஸில் அஜித்குமாரின் குழுவினரும் கலந்து கொண்டுள்ளனர். இன்று இந்த போட்டி தொடங்கும் நிலையில் இதில் அஜித்குமார் வெற்றிபெற வேண்டும் என அவரது ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் இன்று போட்டி நடைபெறும் மைதானத்திலும் ஏராளமான அஜித் ரசிகர்கள் குவிந்துள்ளதோடு, அஜித் பெயரை சொல்லி கோஷமிட்டு வருகின்றனர். பேட்டியிலும் அஜித் பேசும்போது தனது ரசிகர்கள் மீது தான் அளவுகடந்த அன்பு வைத்திருப்பதாக பேசியிருந்தார்.
இந்நிலையில் தற்போது அனிருத் வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் ரேஸ் மைதானத்தில் அஜித்தின் வருகையின்போது ஆலுமா டோலுமா பாடல் ஒலிக்கவிட்டிருக்கிறார்கள். அதை மகிழ்ச்சியுடன் அனிருத் பகிர்ந்துள்ளார்.
Edit by Prasanth.K