அஜித்தின் அடுத்த படத்தில் மோகன்லால்.. ரஜினி, விஜய்யை அடுத்து அஜித்துடனா? மாஸ் தகவல்..!

Mahendran
வியாழன், 19 ஜூன் 2025 (15:00 IST)
நடிகர் அஜித்தின் அடுத்த திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த படத்தில் நடிக்க இருக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
அஜித் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான 'குட் பேட் அக்லி' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், மீண்டும் இதே கூட்டணி இணைகிறது. அஜித்தின் 64வது படமாக உருவாகவுள்ள இதன் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் தொடங்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
 
இந்த நிலையில், ஏகே 64 படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ரஜினியின் 'ஜெயிலர்', விஜய்யின் 'ஜில்லா' ஆகிய படங்களில் மோகன்லால் நடித்த நிலையில், தற்போது அஜித்துடனும் நடிப்பது உறுதி செய்யப்பட்டால், இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
அதுமட்டுமின்றி, இந்தப் படத்தின் நாயகியாக நடிக்க ஸ்ரீநிதி ஷெட்டியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீல நிற சேலையில் ஆளையிழுக்கும் அழகில் அசத்தும் மிருனாள் தாக்கூர்!

வெண்ணிற சேலையில் ஏஞ்சல் லுக்கில் போஸ் கொடுத்த வாணி போஜன்!

உலகளவில் முதல் நாளில் 22 கோடி ரூபாய்… டாப் கியரில் செல்லும் ‘ட்யூட்’!

‘குட் பேட் அக்லி’ எங்களுக்குப் பெரிய லாபமில்லை… தயாரிப்பாளர் ஓபன் டாக்!

ஜூனியர் NTR & பிரசாந்த் நீல் படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு?

அடுத்த கட்டுரையில்
Show comments