பைக் டூர் முடித்துவிட்டு சென்னை திரும்பிய அஜித்..விரைவில் 'விடாமுயற்சி' அப்டேட்

Webdunia
வியாழன், 24 ஆகஸ்ட் 2023 (13:03 IST)
துணிவு படத்துக்குப் பிறகு அஜித் நடிப்பில் உருவாகவுள்ள படம் விடாமுயற்சி.  இப்படத்தை மகிழ்திருமேனி இயக்கவுள்ளார்.  இப்படத்தை  லைகா நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங்  எப்போது தொடங்கும் இப்படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர்.

இப்படத்தில் முக்கிய  கதாபாத்திரத்தில் அர்ஜுன் நடிக்க உள்ளதாகவும், அதேபோல் தமன்னா, த்ரிஷா மற்றும் அர்ஜுன் தாஸ் ஆகியோரும் இப்படத்தின்  நடிப்பதாக தகவல் வெளியானது.

இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்துவிட்டு, சமீபத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு அஜித் பை டூர் சென்றிருந்தார்.

உலக பைக் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு, அஜித்குமார்  நேற்று சென்னை திரும்பியதாக  தகவல் வெளியாகிறது. அவர் விமான  நிலையத்தில் இருந்து புறப்படும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே விடாமுயற்சி அப்டேட் விரைவில் வெளியாகும் என இயக்குனர் மகிழ்திருமேனி அறிவித்திருந்த நிலையில், அஜித்துடன் கலந்து ஆலோசித்துவிட்டு, படக்குழு விரைவில் புதிய அப்டேட் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஒரே தடையும் நீங்கியது.. இந்த தேதியில் ரிலீசா?

திடீரென அமெரிக்கா சென்ற சிவகார்த்திகேயன்.. அட்லி படம் போல் பிரமாண்டம்..!

இன்று வெளியாக இருந்த பாலைய்யாவின் ‘அகண்டா 2’ திடீர் ஒத்திவைப்பு.. நிதி சிக்கலா?

அஜித் படத்தை மீண்டும் இயக்குகிறாரா சிறுத்தை சிவா? மலேசியாவில் திடீர் சந்திப்பு..!

சமந்தா அணிந்திருந்த அந்த மோதிரம் இத்தனை கோடியா? அடேங்கப்பா!

அடுத்த கட்டுரையில்
Show comments