Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித் சார்பில் வழக்கறிஞர் வெளியிட்ட சட்ட அறிக்கை: என்ன காரணம்?

Webdunia
வியாழன், 17 செப்டம்பர் 2020 (16:36 IST)
அஜித் பெயர் தவறாக பயன்படுத்தப்படும்போதெல்லாம் அவர் தனது வழக்கறிஞர் மூலம் சட்ட அறிக்கை ஒன்றை வெளியிடுவார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் சற்றுமுன் அவரது வழக்கறிஞர் வெளியிட்டுள்ள சட்ட அறிக்கை இணையதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த சட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
 
இந்த அறிக்கை நாங்கள்‌ எங்கள்‌ கட்சிக்காரர்‌ திரு. அஜித்‌ குமார்‌ சார்பாக, கொடுக்கும்‌ சட்ட அறிக்கை ஆகும்‌. சமீப காலமாக ஒருசில தனி நபர்கள்‌ பொது வெளியில்‌ என்‌ கட்சிகாரர்‌ சார்பாகவோ, அல்லது. அவரது பிரதிநிதி போலவோ என்‌ கட்சிக்காரர் அனுமயின்றி. தங்களை முன்னிலைப்படுத்தி வருவதாக சில சம்பவங்கள்‌ என்‌ கட்சிகாரர்‌ கவனத்துக்கு வந்து உள்ளது.
 
இதை முன்னிட்டு என்‌ கட்சிகாரர்‌ தன்னுடன்‌ பல வருடங்களாக பணியாற்றி வரும்‌ அவரது மேலாளர்‌ திரு சுரேஷ் சந்திரா மட்டுமே தன்னுடைய அனுமதி பெற்ற தன்‌ பிரதிநிதி என்றும்‌ அவர்‌ மட்டுமே தன்னுடைய சமூக மற்றும்‌ தொழில்‌ ரீதியான நிர்வாகி என்றும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
 
மேலும்‌ தன்னுடைய பெயரை பயன்படுத்‌தி எந்த ஒரு தனி நபரோ, நிறுவனமோ யாரேனும் அணுகினால்‌ அந்த தகவலை திரு சுரேஷ் சந்திரா அவர்களிடம்‌ உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்று‌ வேண்டுகோள் விடுத்துள்ளார். இதை மீறி இத்தகைய நபர்களிடம்‌ தன்‌ சம்பந்தமாக யாரும்‌ தொழில்‌ மற்றும்‌ வர்த்தக ரீதியாக தொடர்பில்‌ இருந்தால்‌, அதனால்‌ ஏதேனும்‌ பாதகம்‌ ஏற்பட்டால்‌ அதற்கு என்‌ கட்சிகாரர்‌ எந்த விதத்திலும்‌ பொறுப்பு இல்லை என்று அறிவப்பதோடு, பொது, மக்களும்‌, இத்தகைய நபர்களிடம்‌ எச்சரிக்கையாக இருக்கும்‌ படி கேட்டுக்‌ கொள்கிறார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பிங்க் நிற உடையில் கூல் லுக்கில் கலக்கும் கௌரி கிஷன்!

இரண்டே நாளில் 100 கோடி ரூபாய் வசூல்.. எம்புரான் படக்குழு அறிவிப்பு!

மனோஜ் பாரதிராஜா மறைவு பற்றி அவதூறு பரப்பாதீர்கள்.. இயக்குனர் பேரரசு ஆதங்கம்!

இரண்டாவது நாளில் சரிந்த மோகன்லாலின் எம்புரான் கலெக்‌ஷன்!

அடுத்த கட்டுரையில்
Show comments