Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மனைவியின் சகோதரியை போட்டோ ஷூட் எடுத்த தல அஜித்

மனைவியின் சகோதரியை போட்டோ ஷூட் எடுத்த தல அஜித்
, சனி, 5 செப்டம்பர் 2015 (18:41 IST)
மனைவி ஷாலினியின் சகோதரி ஷாமிலியை வைத்து போட்டோ ஷூட் சமீபத்தில் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நடிக்க முடிவெடுத்துள்ள ஷாமிலிக்கு அஜித்தான் முதலில் ஆதரவு தெரிவித்தாரம்.
 

 
தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்திற்கு தனி முத்திரை உண்டு, நடிப்பது மட்டும் அல்ல தனி திறமைகளும் பல உண்டு. அந்த வகையில் போட்டோ ஷூட் எடுப்பதிலும் அஜித்திற்கு தனி திறமை உண்டு, முதல் முறையாக நடிகர் அப்புக்குட்டியை வைத்து சமீபத்தில் போடோ ஷூட் நடத்தினார்.
 
தற்போது நடித்து கொண்டு இருக்கும் புதிய படத்தின் ஓய்வு நேரங்களில் தன்னுடைய படத்தின் நாயகியாக நடிக்கும்  சுருதிஹாசசனை வைத்தும் ஒரு போட்டோ ஷூட் எடுத்தார்.
 
இந்நிலையில் தன்னுடைய மனைவி ஷாலினியின் சகோதரி ஷாமிலியை வைத்து போட்டோ ஷூட் சமீபத்தில் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஷாமிலி அஞ்சலி படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.
 
இவர் தற்போது தனுஷுடன் ஒரு படமும் விக்ரம் பிரபுவுடன் ஒரு படத்திற்கும் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil