’துணிவு’ பாங்காக் படப்பிடிப்புக்கு கிளம்பிய அஜித்: வைரல் புகைப்படம்

Webdunia
சனி, 24 செப்டம்பர் 2022 (08:24 IST)
’துணிவு’ பாங்காக் படப்பிடிப்புக்கு கிளம்பிய அஜித்: வைரல் புகைப்படம்
அஜித் நடித்து வரும் ’துணிவு’ என்ற படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டில் உள்ள பாங்காக் நகரில் நடைபெற இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் இந்த படப்பிடிப்பிற்காக ஏற்கனவே இயக்குனர் வினோத் உள்பட படக்குழுவினர் சென்றுவிட்ட நிலையில் நேற்று இரவு சென்னையில் இருந்து அஜித் விமானம் மூலம் பயணம் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது
 
இந்த படப்பிடிப்புடன் ’துணிவு’ படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விடும் என்றும், 20 நாட்கள் பாங்காக்கில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
மேலும் இந்த படப்பிடிப்பில் அஜீத், ஜான் கொகைன், மஞ்சுவாரியர் உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜிப்ரான்இசையில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் அல்லது தமிழ் புத்தாண்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மங்களகரமான மஞ்சள் உடையில் அசத்தும் கீர்த்தி சுரேஷ்!

க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் அசத்தும் மாளவிகா மோகனன் போட்டோஸ்!

ரஜினிக்குக் கதை சொல்ல தொடர்ந்து முயற்சி செய்யும் கார்த்திக் சுப்பராஜ்…!

டாக்டர் சிவராஜ்குமார் நடிக்கும்,"கும்மடி நரசைய்யா" வாழ்க்கை வரலாறு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

பயந்துகொண்டேதான் சென்சாருக்குப் போனேன்… பைசன் படம் குறித்து மாரி செல்வராஜ் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments