Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அப்பாடா... அஜீத் படத்துக்கு பெயர் கிடைச்சிடுச்சி

அப்பாடா... அஜீத் படத்துக்கு பெயர் கிடைச்சிடுச்சி
, வியாழன், 30 அக்டோபர் 2014 (09:30 IST)
கௌதம் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கப்படாமல் இருந்தது. தல 55 என்று அழைக்கப்பட்டு வந்த அதற்கு கடைசியில் ஒரு பெயர் கிடைத்துள்ளது. படத்தின் பெயர்,
 
என்னை அறிந்தால்.

இந்தப் படத்துக்கு ஆயிரம் தோட்டாக்கள், சத்யா உள்பட பல பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. தன்னுடைய கதாபாத்திரப் பெயரை வைக்க வேண்டாம் என்று அஜீத் கேட்டுக் கொண்டதால் சத்யா என்ற பெயர் நிராகரிக்கப்பட்டது. 
 
கௌதம் வழக்கமாக தனது படங்களுக்கு பாடல் வரியைதான் பெயராக்குவார். பச்சைக்கிளி முத்துச்சரம், வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா எல்லாமே பாடல் வரிகள்தான். 
 
அஜீத் படத்தில் சின்ன மாற்றம். எம்.ஜி.ஆர். உன்னை அறிந்தால் என்று பாடினார். அதில் உன்னை என்பதை என்னை என்று மாற்றியிருக்கிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil