Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலைஞர் 100 நிகழ்ச்சியில் அஜித் கலந்துகொள்ள வாய்ப்பில்லை… என்ன காரணம்?

Webdunia
வியாழன், 23 நவம்பர் 2023 (11:32 IST)
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா கலைஞர் 100 என்ற விழா ஒன்றை தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம் டிசம்பர் 24 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்த உள்ளது. இந்த நிகழ்ச்சியில் முன்னணி நடிகர்களான ரஜினி மற்றும் கமல் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இந்த நிகழ்ச்சியில் விஜய் மற்றும் அஜித் ஆகியோர் கலந்து கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறார்களாம். அவர்களுக்கு அதற்கான அழைப்பிதழும் வழங்கப்பட்டுள்ளது என தெரிகிறது.

ஆனால் கடந்த பல ஆண்டுகளாகவே அஜித், இதுபோன்ற பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை. இந்நிலையில் இப்போது கலைஞர் 100 நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொள்ள வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது. ஏனென்றால் அவர் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இறுதி வரை அஜர்பைஜான் நாட்டில் நடக்க உள்ளதாம்.

அதனால் அவர் சென்னையில் நடக்கும் இந்த விழாவில் கலந்துகொள்வது சந்தேகம்தான் என சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள். அதே போல விஜய்யும் விரைவில் அரசியலில் இறங்க உள்ளதால் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கேம்சேஞ்சர் ப்ரமோஷன்… ஜானி மாஸ்டர் பெயரை நீக்கிய கியாரா அத்வானி!

செஸ் சாம்பியன் குகேஷை சந்தித்து பரிசளித்த சிவகார்த்திகேயன்!

கமல்ஹாசனுக்காக எழுதிய கதையை மம்மூட்டியை வைத்து இயக்கும் பிரபல இயக்குனர்!

மீண்டும் தாணு தயாரிப்பில் படம் நடிக்கும் விஜய் சேதுபதி!

சல்மான் கான் பிறந்தநாளில் வெளியாகும் ‘சிக்கந்தர்’ ப்ரமோஷன் வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments