Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடாமுயற்சி ரிலீஸ் திட்டம் என்ன? அஜித் மேலாளர் சுரேஷ் சந்திரா பகிர்ந்த தகவல்!

vinoth
வெள்ளி, 5 ஏப்ரல் 2024 (08:03 IST)
அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் ஷுட்டிங் அஸர்பைஜானில் தற்போது நடந்து வருகிறது.  அஜித், திரிஷா உள்ளிட்டவர்கள் ஷூட்டிங்கில் கலந்துகொண்டுள்ளனர். இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார்.  இந்த படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடந்து வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அஜித் ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்துகொண்டு தற்போது ஓய்வில் இருக்கிறார். அறுவை சிகிச்சை செய்துகொண்டதால் அவரால் இன்னும் சில மாதங்களுக்கு ஷூட்டிங் செல்ல முடியாது என ஒரு வதந்தி பரவி வந்தது. இது பற்றி அஜித் தரப்பு தற்போது விளக்கம் அளித்துள்ளது. அதில் “லைகா நிறுவனம் எப்போது அழைத்தாலும் ஷூட்டிங் செல்ல அஜித் தயாராக இருக்கிறார்” எனக் கூறியுள்ளது.

இந்நிலையில் தற்போது விடாமுயற்சி படம் பற்றி பேசியுள்ள அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா “படத்தை அக்டோபரி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகிறோம். இதுவரை 60 சதவீத ஷூட்டிங் முடிந்துள்ளது. ஏப்ரல் 20 ஆம் தேதி அடுத்த கட்ட ஷூட்டிங் தொடங்குகிறது.” எனக் கூறியுள்ளார். அக்டோபரில் ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு இந்த படம் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments