Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல வருடங்களுக்குப் பிறகு அஜித்தோடு இணைந்த பிரபலம்… ரசிகர்கள் குஷி!

Webdunia
சனி, 21 மே 2022 (15:48 IST)
நடிகர் மகாநதி சங்கர் ‘அஜித் 61’ படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித்தின் 61வது படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் சிறிய பூஜையுடன் தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு படப்பிடிப்பிற்காக தயார் நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்ட படம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது வங்கி மாதிரி போடப்பட்ட செட்டில்தான் H வினோத் படப்பிடிப்பை நடத்தி வருகிறாராம். இந்நிலையில் இந்த படத்தில் அசுரன் பட நாயகி மஞ்சி வாரியர் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தீனா உள்ளிட்ட படங்களில் அஜித்தோடு இணைந்து நடித்த மகாநதி சங்கர் அஜித் 61 படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடைசியாக இவர் திருப்பதி படத்தில் அஜித்தோடு இணைந்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

2024-25ல் மட்டும் ரூ.120 கோடி வரி செலுத்திய அமிதாப் பச்சன்.. ஆச்சரிய தகவல்..!

திரையரங்கம் சிதறட்டும். பொடிசுங்களா கதறட்டும்.. ‘குட் பேட் அக்லி’ சிங்கிள் பாடல்..!

தெலுங்கு மற்றும் இந்தியில் கூலி படத்துக்கு இப்படி ஒரு சிக்கலா?

அழகுப் பதுமையாக ஜொலிக்கும் ரித்து வர்மா… க்யூட் போட்டோஸ்!

கிளாமர் உடையில் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments