Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித் எப்படி இருக்கிறார்… அணி வீரர் ஃபேபியன் பகிர்ந்த தகவல்!

vinoth
புதன், 8 ஜனவரி 2025 (09:11 IST)
நடிகர் அஜித்குமார் சில மாதங்கள் சினிமாவில் இருந்து ஒரு இடைவெளி எடுத்துக் கொண்டு கார் ரேஸ் போட்டிகளில் கலந்துகொள்ள உள்ளார். இதற்காக அஜித்குமார் ரேஸிங் என்ற நிறுவனத்தை அஜித் உருவாக்கியுள்ளார். இந்த  அணியின் மற்ற உறுப்பினர்கள் யார் என்பது குறித்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது.

இந்த நிறுவனத்தின் உரிமையாளராகவும், முதன்மை ஓட்டுனராகவும் அஜித் செயல்பட,  ஃபேபியன் ட்யூபிக்ஸ், மேத்யூ டெய்ட்ரி மற்றும் கேம் மெக்லார்ட் ஆகியோர் மற்ற உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். இந்நிலையில் துபாயில் ரேஸுக்கான பயிற்சியில் அஜித் ஈடுபட்ட போது அவர் சென்ற கார் விபத்துக்குள்ளானது. ஆனால் அவர் பாதுகாப்பு உடைகள் மற்றும் தலைக்கவசம் அணிந்திருந்ததால் அவருக்குப் பெரிய அடி எதுவும் படவில்லை என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அஜித்தின் அணி உறுப்பினர்களில் ஒருவரான பேபியன் “அஜித் காயங்கள் இன்றி நலமாக இருக்கிறார்.  என்றுமே மேலும் கற்பதற்கான பயணம் முடியாது என்பதற்கான நினைவூட்டலாக அந்த சம்பவம் இருந்தது. இடையூறுகள் இருந்தாலும்  ரேஸிங் மீதான ஆர்வம் ஒவ்வொன்றில் இருந்து கற்றுக்கொள்ளவும் முன்னேறிச் செல்லவும் உத்வேகமாக உள்ளது. பாடங்கள் நிறைந்த இந்த பாதையை ஒரு குடும்பமாகவும் அணியாகவும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பாலைவனத்தில் சோலையாக தனித்து நிற்கும் சமந்தா… அழகிய க்ளிக்ஸ்!

லோகேஷும், சேகர் கமுலாவும் இரு வேறு பார்வை கொண்டவர்கள்… நாகார்ஜுனா கருத்து!

கூலி முதல் பாதி ‘லாக்’… படம் பார்த்த ரஜினியின் ரியாக்‌ஷன் இதுதான்!

அப்பாவின் ஸ்டைலை அப்படியே பின்தொடரும் சண்முக பாண்டியன்… கொம்பு சீவி படக்குழுவினருக்கு விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments