Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தல அஜித் நடித்து வரும் புதிய படத்திற்கு ’ரெட்’ கெட்டப்

தல அஜித் நடித்து வரும் புதிய படத்திற்கு ’ரெட்’ கெட்டப்
, சனி, 19 செப்டம்பர் 2015 (18:14 IST)
இயக்குனர் சிறுத்தை சிவா, தற்போது அஜித்தை வைத்து இயக்கி வரும் பெயரிடப்படாத புதிய படத்தில், ப்ளாஷ்பேக் காட்சியில் ரெட் கெட்டப்பில் நடிப்பதாக தெரிவித்துள்ளார்.


 



வீரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் தற்போது நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் கதநாயகியாக ஸ்ருதிஹாசனும், தங்கையாக லட்சுமி மேனன், சூரி உள்ளிட்ட பலர் அஜித்துடன் இணைந்து நடித்து வருகிறார்கள்.

படத்தின் படப்பிடிப்பு சென்னை, இத்தாலி, கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னை, மோகன் ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் அஜித் ப்ளாஷ்பேக் காட்சிகளில் 'ரெட்' படத்தின் கெட்டப்பில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டுவிட்டதாகவும் மீதம் 2 பாடல் காட்சிகள் மட்டுமே இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படத்தை தீபாவளிக்கு வெளியிட முடிவு படத்தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இப்படத்தின் பெயர் மற்றும் டீஸர் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என்று அஜித் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால், இந்தபடம் குறித்து எந்த ஒரு தகவலையும் வெளியிடாமல் சஸ்பென்ஸ் காத்து வருகின்றனர் படக்குழு.

Share this Story:

Follow Webdunia tamil