Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் அஜித் பட நடிகர்

arjune
Webdunia
திங்கள், 31 மே 2021 (23:01 IST)
பிரபல தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு   தெலுங்கு சினிமாவில் மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு இணையான ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ளவர் சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ்பாபு.

இவரை தெலுங்கு சினிமாவின் பிரின்ஸ் என்று செல்லமாக அழைக்கின்றனர் ரசிகர்கள். இவரது ஒவ்வொரு படமும் வசூலை வாரிக்குவிப்பதால் இவர் வசூல் சக்கரவர்த்தி என்று அழைக்கப்படுகிறார்.

இவர் தற்போது ’’சர்காரு வாரி பாட்டா’என்ற பிரமாண்ட ஆக்சன் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் எப்போது ரிலீஸாகும் என அவரது ரசிகர்கள் காத்திருக்கு நிலையில் இன்று இப்படத்தைக் குறித்த முக்கிய அறிவிப்பை சமீபத்தில் படக்குழு வெளியிட்டது.

அதில்,’ சர்காரு வாரி பாட்டா’படம் அடுத்தாண்டு(2022) சங்கராந்தி அன்று தியேட்டரில் ரிலீசாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் அட்வான்ஸ் புக்கிங்கிற்கான வேலைகள் நடந்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துவருகிறார். இதில் இருவருக்குமான கேரக்டர்கள் பற்றிய தகவல் கசிந்துள்ளது.

மகேஷ் பாபு பரசுராம் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் வங்கி மோசடியைப் பின்னணியாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் மகேஷ் பாபு வங்கி மேலாளராகவும், அவரது உதவியாளராக கீர்த்தி சுரேஷ் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. தமன் இசையமைத்து வரும் இப்படத்தை மைதிரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் மகேஷ்குமாருக்கு வில்லனாக அர்ஜூன் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் சண்டைக் காட்சிகளில் வெளுத்து வாங்குவார் என்பதால் இப்படத்தில்  சூப்பர் ஸ்டாருக்கு அர்ஜூன் டஃப் கொடுப்பார் எனக் கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷிவானி நாராயணின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

லுங்கி கட்டி க்யூட்டான போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜி வி பிரகாஷ் & சைந்தவி விவாகரத்து… நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

மகனுக்காகக் கைவிட்ட வன்முறையை அதே மகனுக்காகக் கையில் எடுக்கும் AK..இதுதான் GBU கதையா?

5 ஆண்டு தாமதத்துக்குப் பிறகு ரிலீஸாகும் மிர்ச்சி சிவாவின் ‘சுமோ’!

அடுத்த கட்டுரையில்
Show comments