Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித்தின் 'விவேகம்' டீசர் விமர்சனம்

Webdunia
புதன், 10 மே 2017 (23:59 IST)
அஜித் ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்பான 'விவேகம்' படத்தின் டீசர் சற்று முன்னர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் சுனாமியை எழுப்பிவிட்டது. அஜித்தின் அட்டகாசமான ஸ்டைலிஷான் தோற்றத்தை பார்த்து அவரது எதிரிகளே வாய்பை பிளக்கின்றனர்.





நாம் ஏற்கனவே கூறியபடி 57 வினாடிகள் ஓடும் இந்த டீசரில் முழுக்க முழுக்க ஆக்சன் காட்சிகள் தான். ஹெலிகாப்டர்களின் வர்ணஜாலம், பனிமலையில் துப்பாக்கி சூடு, அஜித்தின் தெறிக்க வைக்கும் ஸ்டைல், 'இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும், எல்லா சூழ்நிலையிலும் நீ தோத்துட்டா..தோத்துட்டன்னு உன் முன்னாடி நின்னு சொன்னாலும், நீயா ஒத்துக்கற வரைக்கும் எவனாலும், எங்கேயும் எப்பவும் உன்னை யாராலும் ஜெயிக்க முடியாது' என்ற பஞ்ச் டயலாக், முழுக்க முழுக்க வெளிநாட்டின் பிரமாண்டமான லொகேஷன் ஆகியவை கண்களுக்கு விருந்தளிக்கின்றன

ஆனாலும் காஜல் அகர்வால், அக்சரா ஹாசன், விவேக் ஓபராய் ஆகியோர்களை ஒரே ஒரு ஷாட்டாவது காண்பித்திருக்கலாம் என்ற குறை மனதில் எழுகிறது. ஆனால் முழுக்க முழுக்க அஜித்தை பார்க்கும்போது மனம் நிறைந்து காணப்படுகிறது

தமிழ் சினிமா இந்த அளவுக்கு ஒரு ஸ்டைலிஷான டீசரை இதுவரை பார்த்தைல்லை என்னும் அளவுக்கு பிரமாண்டமாக உள்ளது 'விவேகம்' டீசர்; வாழ்த்துக்கள் சிறுத்தை சிவா குழு!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’குபேரா’ புரமோஷனில் ஒரே ‘கூலி’ கேள்வி தான்.. நாகார்ஜூனாவால் தனுஷ் அப்சேட்..

விஜய் படத்தை இயக்கியும் வாய்ப்பு இல்லாமல் இருக்கும் வெங்கட்பிரபு.. கைவிரித்த எஸ்கே..!

கண்கவர் உடையில் போட்டோஷுட் நடத்திய பிரியங்கா மோகன்… ரீசண்ட் க்ளிக்ஸ்!

கண்ணோடு மோதும் கண்ணாடிப்பூவே…பூஜா ஹெக்டேவின் அழகிய க்ளிக்ஸ்!

நான் யார் என்பதை மற்றவர்களின் கருத்துகள் வரையறுக்க அனுமதிக்க மாட்டேன் –அஜித்குமார் பேட்டி!

அடுத்த கட்டுரையில்
Show comments