Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பதில் சொல்லுங்க வக்கீல் சார்? அஜித்தை உலுக்கி எடுத்த வித்யாபாலன்

Webdunia
வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (20:18 IST)
அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் இம்மாதம் 8ம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளும் ஜெட் வேகத்தில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சமூக வலைதளங்களில் இந்த படத்தில் கிளிப்பிங் வீடியோ காட்சிகள் அவ்வப்போது வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது
 
அந்த வகையில் சற்று முன் இந்த படத்தின் 20 வினாடி புரமோஷன் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் அஜித் மனைவியாக இந்த படத்தில் நடித்துள்ள வித்யாபாலன் பேசும் வசனங்கள் இடம்பெற்றுள்ளன. சீக்கிரமா வீட்டுக்கு வரேன்னு எனக்குத்தந்த பிராமிஸ் என்ன ஆச்சு? அதென்ன யாருமே பொண்டாட்டிக்கு பண்ண பிராமிஸை மதிப்பில்லை, பதில் சொல்லுங்க வக்கீல் சார்? என அஜித்தை உலுக்கி எடுப்பது போலவும், அதற்கு அஜித் தலையை குனிந்தபடி வித்யாபாலனை ஓரக் கண்ணால் பார்ப்பது போலவும் இந்த வீடியோவில் உள்ளது.  இந்த வீடியோ அஜித் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
எச்.வினோத் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள 'நேர் கொண்ட பார்வை' திரைப்படத்தில் அஜித், வித்யாபாலன், ஷராதா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடச்சலம், ஆண்ட்ரியா தரங், பிரகாஷ்ராஜ், மஹேஷ் மஞ்சுரேக்கர், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே, டெல்லி கணேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர்.  நீரவ்ஷா ஒளிப்பதிவில் கோகுல் சந்திரன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் வசூலில் சாதனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

கார்ஜியஸ் லுக்கில் கருநிற உடையில் கவர்ந்திழுகும் ஷ்ருதிஹாசனின் போட்டோஷூட்!

வருஷம் 2040… உலகம் எங்கயோ போயிடுச்சு… இன்னும் இவன் இத நம்பிட்டு இருக்கான்.. எப்படி இருக்கு LIK டீசர்?

மதராஸி படத்துக்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் என் படத்துக்கு வருவார்கள்… KPY பாலா நம்பிக்கை!

மோகன் ஜி இயக்கத்தில் உருவாகும் ‘திரௌபதி 2’… முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments