அஜித்தின் ‘பில்லா’ மீண்டும் ரிலீஸ்: ரசிகர்கள் கொண்டாட்டம்!

Webdunia
திங்கள், 22 பிப்ரவரி 2021 (08:18 IST)
அஜித்தின் ‘பில்லா’ மீண்டும் ரிலீஸ்: ரசிகர்கள் கொண்டாட்டம்!
அஜித் நயன்தாரா நடிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான திரைப்படம் பில்லா. ரஜினியின் பில்லா படத்தின் ரீமேக் திரைப்படமான இந்த படம் கடந்த 2007ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து 2012ஆம் ஆண்டு இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளிவந்து சுமாராக ஓடியது. இந்த நிலையில் அஜீத் ரசிகர்களின் விருப்பத்திற்கு உரிய திரைப்படங்களில் ஒன்றான பில்லா திரைப்படம் மீண்டும் புதிய தொழில்நுட்பத்தில் வரும் மார்ச் 12ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
அஜித்தின் படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேல் ஆகியுள்ள நிலையில் தற்போது பில்லா படம் புதிய தொழில்நுட்பத்துடன் வெளியாக உள்ளது அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
அஜித்தின் பில்லா படத்தின் ரிலீசை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மார்ச் 12ஆம் தேதி தமிழகம் முழுவதும் பெருவாரியான திரையரங்குகளில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷின் ‘இட்லி கடை’ ஓடிடி ரிலீஸ்.. தேதி என்ன? எந்த ஓடிடி?

இந்திய மெகா சீரியலில் நடிக்கும் பில்கேட்ஸ்! உறுதிப்படுத்திய ஸ்மிருதி இரானி!

மனோரமா மகன், தேவா தம்பி.. ஒரே நாளில் தமிழ் திரையுலகில் 2 மரணங்கள்.. கண்ணீர் அஞ்சலி..!

பிரபல இசை நிறுவனத்தின் மேல் அதிருப்தியில் சந்தோஷ் நாராயணன்… என்ன காரணம்?

தெலுங்கில் நாளை ரிலீஸாகும் மாரி செல்வராஜின் ‘பைசன்’..!

அடுத்த கட்டுரையில்
Show comments