Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குட் பேட் அக்லி படத்துக்காக இந்த வெளிநாட்டுக்கு செல்லும் படக்குழு… அஜித் மேனேஜர் கொடுத்த அப்டேட்!

vinoth
சனி, 29 ஜூன் 2024 (10:41 IST)
அஜித் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்த விடாமுயற்சி திரைப்படம் பொருளாதார காரணங்களால் தாமதமாகி வரும் நிலையில் அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் ஷூட்டிங் திட்டமிடப்பட்டதை விட முன்பே தொடங்கி தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது.

ஐதராபாத்தில் நடந்த முதல் கட்ட ஷூட் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்த கட்ட ஷூட்டிங்குக்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் அடுத்த கட்ட ஷூட்டிங் தென்னாப்பிரிக்காவில் நடக்கவுள்ளது” எனக் கூறியுள்ளார். இப்போது அஜித் விடாமுயற்சி ஷூட்டிங்குக்காக அஸர்பைஜானில் இருக்கும் நிலையில் அதை முடித்ததும் தென்னாப்பிரிக்கா கிளம்புவார் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹாட் லுக்கிங் போட்டோ ஆல்பத்தைப் பகிர்ந்த திஷா பதானி!

மஞ்சக் காட்டு மைனாவான ரகுல் ப்ரீத் சிங்… கண்கவர் ஆல்பம்!

நிகில் சித்தார்த்தா நடிப்பில்,ராம் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான 'தி இந்தியா ஹவுஸ்' படத்தின் தொடக்க விழா

ஒரு வழியாக இறுதிகட்டத்தை நெருங்கும் விடுதலை 2 ஷூட்டிங்!

ஷாலினிக்கு நடந்த அறுவை சிகிச்சை?... சென்னைக்கு திரும்பாமல் விடாமுயற்சி ஷூட்டிங்கில் அஜித்!

அடுத்த கட்டுரையில்
Show comments