Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் நாடு முழுக்க ரிலீஸுக்கு முன்பே பிரிமியர் ஷோ.. குட் பேட் அக்லி படக்குழு எடுத்த முடிவு!

தமிழ் நாடு முழுக்க ரிலீஸுக்கு முன்பே பிரிமியர் ஷோ.. குட் பேட் அக்லி படக்குழு எடுத்த முடிவு!
vinoth
வெள்ளி, 31 ஜனவரி 2025 (10:48 IST)
சமீபகாலமாக ஒவ்வொரு படத்துக்கும் இடையே இடைவெளி எடுத்துக்கொண்ட அஜித் தற்போது ஒரே நேரத்தில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.  இதில் விடாமுயற்சி ஷூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில் குட் பேட் அக்லி ஷுட்டிங் இரண்டு கட்டங்கள் நடந்து முடிந்துள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா மற்றும் த்ரிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்துக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆன தேவி ஸ்ரீ பிரசாத் திடீரென நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ஜி வி பிரகாஷ் ஒப்பந்தம் ஆகியுள்ளார். படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்த படம் ஏப்ரல் 10 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரிலீஸுக்கு முன்பே ஏப்ரல் 9 ஆம் தேதி தமிழகத்தின் முக்கிய நகரங்களில் எல்லாம் பிரிமியர் ஷோ நடத்த படக்குழு முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்றாவது ஒருநாள் தேசிய விருதை வாங்குவேன்… அம்மா கொடுத்த புடவையோடு வருவேன் – சாய் பல்லவி நம்பிக்கை!

தனுஷுடன் முதல் முறையாக இணைந்து நடிக்கும் அர்ஜுன்… எந்த படத்தில் தெரியுமா?

ரஜினிக்கும் வில்லன் ஆகிறாரா எஸ் ஜே சூர்யா?... திரை தீ பிடிக்கப் போகுது!

ரெட்ரோ படத்தில் பூஜா ஹெக்டேவின் கதாபாத்திரம் இதுவா?.. Decode செய்த ரசிகர்கள்!

கிருத்திகா உதயநிதி இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ விஜய் சேதுபதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments