குட் பேட் அக்லி ஷூட்டிங்கில் நடந்த திடீர் மாற்றம்… ஜப்பானுக்கு பதில் இந்த நாட்டில்தான் ஷூட்டிங்கா?

vinoth
புதன், 10 ஜூலை 2024 (07:15 IST)
அஜித் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்த விடாமுயற்சி திரைப்படம் பொருளாதார காரணங்களால் தாமதமாகி வரும் நிலையில் அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் ஷூட்டிங் திட்டமிடப்பட்டதை விட முன்பே தொடங்கி தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது.

ஐதராபாத்தில் நடந்த முதல் கட்ட ஷூட் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்த கட்ட ஷூட்டிங்குக்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் அடுத்தகட்டமாக இந்த படத்தின் ஷூட்டிங் ஜப்பானில் நடக்கும் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது ஜப்பானுக்கு பதிலாக ஸ்பெயினுக்கு இந்த படத்தின் ஷூட்டிங்குக்காக படக்குழுவினர் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments