Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்தில் முதல் நாள் வசூல்… சாதனைப் படைத்த ‘குட் பேட் அக்லி’

vinoth
வெள்ளி, 11 ஏப்ரல் 2025 (18:40 IST)
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  இந்நிலையில், இந்த படம் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

கேங்ஸ்டர் ஆக இருக்கும் அஜித், தனது மனைவி திரிஷா சொன்ன காரணத்திற்காக ஜெயிலுக்கு போகிறார். மகனின் பதினெட்டாவது பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என்று ஜெயிலரின் உதவியுடன் வெளியே வரும் அஜித், தனது மகனை யாரோ கடத்திவிட்டார்கள் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைகிறார். அதன் பின்னர் மகனை மீட்க அவர் மேற்கொள்ளும் போராட்டம்தான் கதை. படம் இந்திய அளவில் முதல் நாளில் 28 முதல் 30 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இங்கிலாந்தில் முதல் நாளில் ஒரு லட்சம் பவுண்ட் வசூலித்து சாதனைப் படைத்துள்ளது. இதுவரை எந்த தமிழ்ப் படமும் இவ்வளவு பெரிய தொகையை முதல் நாளில் வசூலித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆர்யாவின் 36வது திரைப்படம்.. டீசர் வீடியோ வெளியீடு..!

தலைவா வா..! ராணுவத்திலிருந்து திரும்பிய BTS குழு.. Purple மயமான தென் கொரியா!

2 ஹீரோ, 4 ஹீரோயின்கள் படத்தை தயாரிக்கும் ரவிமோகன்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

யாஷிகா ஆனந்தின் ரீசண்ட் கிளாமர் க்ளிக்ஸ்!

ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments