Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’குட் பேட் அக்லி’ ரிசல்ட் பத்தி கவலையில்லை.. அடுத்த கார் போட்டிக்கு தயாராகும் அஜித்..!

Siva
வியாழன், 10 ஏப்ரல் 2025 (16:03 IST)
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  இந்நிலையில், இந்த படம் பாசிட்டிவ் ரிவ்யூஸ் சூழ்ந்திருக்க, அஜித் மற்றொரு கார் போட்டிக்கு தயாராகி வருகிறார்.
 
‘குட் பேட் அக்லி’ படம் வெளியாகிய நாளிலேயே, அடுத்த கார் பந்தயமான Gt4 European Series-க்கு தயாராவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ள அஜித்தின் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 
ஏற்கனவே துபாயில் நடைபெற்ற பந்தயத்தில் அவரது 'Ajith Kumar Racing Team' மூன்றாம் இடம் பிடித்தது. தொடர்ந்து இத்தாலியிலும் அதே இடத்தை கைப்பற்றியிருக்கிறார். இப்போது அடுத்த இலக்கு  GT4 European Series என்றும் இந்த போட்டியில் முதலிடத்தை பிடிக்க அஜித் கார் ரேஸ் அணி தீவிர முயற்சி எடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த புதிய போட்டிக்காக கார் செட்டிங்கில் அஜித் ஈடுபடுவதை காட்டும் வீடியோ, ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் அவர் தொடர்ந்து கார் ரேஸில் ஈடுபட உள்ளதால் அவருடைய அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாக கால தாமதம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷூட்டிங் தொடங்கும் முன்னரே விற்பனை ஆன ‘சூர்யா 46’ வின் ஓடிடி உரிமம்…!

ஜனநாயகன் படத்தில் என்னை அவமதித்துவிட்டார்கள்… பிரபல நடிகை புலம்பல்!

’ரெட்ரோ’ முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? பட்ஜெட்டில் பாதிக்கும் மேல்..!

எத்தனை படம் நடிச்சிருந்தாலும்.. அதுதான் என் மனசுக்கு பிடிச்ச படம்! - அஜித்குமார்!

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments