Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏ.எம்.ரத்னத்துக்கு அஜீத் தந்த ஹாட்ரிக் வாய்ப்பும், கான்ட்ரவர்ஸியும்

Webdunia
வியாழன், 30 அக்டோபர் 2014 (13:09 IST)
ஒருகாலத்தில் நிக் ஆர்ஸ்ட் சக்ரவர்த்தியின் தயாரிப்பில் மட்டுமே அஜீத் நடித்து வந்தார். தயாரிப்பில் சக்ரவர்த்தியின் பெயர் இருந்தாலும் படத்தின் பைனான்ஸ் பின்புலம் அஜீத் என்றொரு வதந்தி அப்போது இருந்தது.
சக்ரவர்த்தியின் தயாரிப்பில் தொடர்ந்து நடித்த போது அஜீத்துக்கும் ஏ.எம்.ரத்னத்துக்கும் ஏழாம் பொருத்தம். இணைந்து படமே செய்ததில்லை. ஒருகட்டத்தில் சக்ரவர்த்தியை அஜீத் கழற்றிவிட அதன் பிறகுதான் அஜீத்தின் கையில் பணம் தங்க ஆரம்பித்தது.
 
கில்லி போன்ற அட்டகாசமான ஹிட் படங்களை தயாரித்த ரத்னம் தனது இரு மகன்கள் காரணமாக நஷ்டமடைந்து கைத்தூக்கிவிட யாராவது வர மாட்டார்களா என்று ஏங்கிக் கொண்டிருந்த நேரத்தில் அவரது நிலைமை அறிந்து அஜீத்தே முன்வந்து ஆரம்பம் படத்தை தயாரிக்கும் வாய்ப்பை அளித்தார். ஒரே படத்தில் கடன்களை அடைத்து செட்டிலானார் ரத்னம்.
 
தற்போது கௌதம் இயக்கத்தில் அஜீத் நடித்துவரும் என்னை அறிந்தால் படத்தையும் ரத்னமே தயாரித்து வருகிறார். சமீபத்திய தகவல், அடுத்து சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தையும் ரத்னமே தயாரிக்கிறார்.
 
ரத்னத்துக்கு அஜீத் தொடர்ந்து வாய்ப்பு தருவதால் ரத்னத்தின் பைனான்ஸ் பின்புலம் அஜீத்தா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நடிகர் பிரபாஸ்-க்கு திருமணமா? இன்ஸ்டாகிராம் ஸ்டோரியால் பரபரப்பு..!

பாத்தீங்காளா பாஜக சாதனைகளை? வீடியோ போட்ட ராஷ்மிகா! – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

'P T சார்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

Show comments