Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெயர் வைக்கும் முன்பே பேரம் படிந்த அஜித் படம்

Webdunia
வெள்ளி, 4 செப்டம்பர் 2015 (15:27 IST)
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை.
 
படப்பிடிப்பு என்ன படப்பிடிப்பு? படத்துக்கு இன்னும் பெயரே வைக்கவில்லை. அதற்குள் படத்தின் முக்கால்வாசி ஏரியாக்களை நல்ல தொகைக்கு விற்றிருக்கிறார் ஏ.எம்.ரத்னம்.
 
கடன் தொல்லை கழுத்தை நெரிக்க, நாற்பதாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்குப் போய்க் கொண்டிருந்த நேரத்தில் ரத்னத்தை அழைத்து ஆரம்பம் படத்தை தயாரிக்க வாய்ப்பு கொடுத்தார் அஜித்.
 
ஒரே படத்தில் கடனை அடைத்து பழைய ராஜாவானார் ரத்னம். அடுத்து என்னை அறிந்தால் படம். அதையடுத்து சிவா இயக்கும் படம் என தொடர்ந்து ரத்னத்துக்கே கால்ஷீட் தந்தார்.
 
சிவா அஜித்தை வைத்து இயக்கிய வீரம் நன்றாகப் போனதால் கேள்வி கேட்காமல் படத்தின் ஏரியா பேரம் படிந்திருக்கிறது. நமக்கு கிடைத்த தகவல்கள் உண்மையென்றால் எண்பது சதவீத ஏரியாக்கள் ஏற்கனவே விலை போய்விட்டன.
 
வெளிமாநில, வெளிநாடு உரிமைகளுக்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாக தகவல்.

நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ திரைப்படம் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் & சயின்ஸ் லைப்ரரியில் இடம்பெற்றுள்ளது!

விஷால் நடிக்கும் அண்ணாமலை பயோபிக் திரைப்படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?... லேட்டஸ்ட் தகவல்!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்… ரீசண்ட் ஆல்பம்!

கணவரோடு வெளிநாட்டு கடற்கரையில் வைப் பண்ணும் ரகுல்… க்யூட் ஆல்பம்!

விஜய்யின் கோட் படத்தில் நடித்து முடித்த சிவகார்த்திகேயன்!

Show comments