Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாஸ்டர் படத்தின் லீக்கான காட்சிகளை பரப்புவது இவர்களா?

Webdunia
செவ்வாய், 12 ஜனவரி 2021 (16:32 IST)
மாஸ்டர் படத்தின் காட்சிகள் இணையத்தில் கசிந்த நிலையில் அதை அஜித் ரசிகர்கள் பரப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ள திரைப்படமாக மாஸ்ட திரைப்படம் உள்ளது. லோகேஷ் இயக்கியுள்ள அந்த  திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் ஜனவரி 13 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. ஆனால் படக்குழுவினருக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக மாஸ்டர் படத்தின் சில காட்சிகள் இணையத்தில் திருட்டுத்தனமாக சிலரால் வெளியிடப்பட்டன. இதனால் அதிர்ச்சியான படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘இது எங்களின் ஒன்றரை வருட உழைப்பு. தயவு செய்து இன்னும் ஒருநாள் காத்திருங்கள் எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்த காட்சிகளை அதிகளவில் இணையத்தில் அஜித் ரசிகர்கள்தான் பரப்பினார்கள் என சொல்லப்படுகிறது. அதற்குக் காரணம் கடந்த ஆண்டு அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் காட்சிகள் இதேபோல இணையத்தில் வெளியான போது அதை விஜய் ரசிகர்கள் போட்டி போட்டு பரப்பினார்களாம். அதற்குப் பழிவாங்கதான் இப்போது அஜித் ரசிகர்கள் பரப்புவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

அடுத்த கட்டுரையில்
Show comments