Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குட் பேட் அக்லி படத்தில் அஜித்தின் ஹிட் பட இசைப் பயன்படுத்தப்பட்டுள்ளது.. ஜி வி பிரகாஷ் கொடுத்த அப்டேட்!

vinoth
சனி, 8 பிப்ரவரி 2025 (07:43 IST)
இந்த ஆண்டில் அஜித்தின் இரண்டு படங்கள் ரிலீஸாகின்றன. இதில் விடாமுயற்சி பிப்ரவரி 6 ஆம் தேதி ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இதையடுத்து குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு படங்களின் டிஜிட்டல் உரிமைகளையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

அதனால் இரண்டு படங்களும் குறுகிய காலத்தில் நெட்பிளிக்ஸில் வெளியானால் அது எதாவது ஒரு படத்தை பெரியளவில் பாதிக்கும் என்பதால் குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸை தள்ளிவைக்க சொல்லி நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரிப்பு நிறுவனத்துக்கு கோரிக்கை வைத்துள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. இதை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் ஏற்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இந்நிலையில் குட் பேட் அக்லி திரைப்படத்துக்கு இசையமைக்கும் ஜி வி பிரகாஷ் ‘படத்தில் அஜித்தின் பழைய ஹிட் படத்தின் மாஸ் ஆன இசை ஒன்று பயன்படுத்தப்பட்டுள்ளது” என அப்டேட் கொடுத்துள்ளார். அது அஜித் நடிப்பில் வெளியான தீனா படத்தின் பின்னணி இசை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரபாஸுக்கு வில்லன் ஆகிறாரா விஜய் சேதுபதி?.. எந்த படத்தில் தெரியுமா?

நடிகை எமி ஜாக்சனுக்கு 2வது ஆண் குழந்தை.. பெயர் என்ன தெரியுமா?

சலார் 2 என்ன ஆச்சு?... நடிகர் பிரித்விராஜ் கொடுத்த அப்டேட்!

மூக்குத்தி அம்மன் ஷூட்டிங்கில் நயன்தாராவுடன் சுந்தர் சி மோதலா?.. நின்ற படப்பிடிப்பு!

கார்த்தி 29 படத்தின் கதாநாயகி இவரா?.. வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments