Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மௌனராகம் மோகன் போல ஆகிடுவேன்… உஷாராக கதாபாத்திரத்தை மறுத்த அஜித்!

Webdunia
செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (16:16 IST)
நடிகர் அஜித் ஒரு காலத்தில் பல படங்களில் சிறப்பு தோற்றங்களில் நடித்து வந்தார்.

சில படங்களில் கதாநாயகர்களை விட குணச்சித்திர வேடத்திலோ அல்லது வில்லன் வேடத்திலோ நடித்தவர்கள் ஸ்கோர் செய்து விடுவார்கள். மௌனராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரம் முதல் மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வரை பல உதாரணங்களை சொல்லலாம்.

அஜித் ஒரு காலத்தில் பல படங்களில் நட்புக்காக சில கௌரவ வேடங்களில் நடித்து வந்தார். அதில் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்த படம் நி வருவாய் என. அந்த படத்தில் சுப்ரமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால் இயக்குனர் ராஜகுமாரன் ‘அந்த படத்தில் பார்த்திபன் நடித்த கதாநாயகன் வேடத்தில் நடிக்க சொன்னபோது மறுத்துவிட்டாராம்.

ஏனென்றால் அந்த படத்தில் கதாநாயகி அந்த கதாபாத்திரத்தை வேண்டாம் என ஒதுக்கி விடுவார். இதுபோல மௌனராகம் படத்திலும் மோகன் கதாபாத்திரத்தை ரேவதி ஒதுக்குவார். அந்த படத்தில் கார்த்திக் கதாபாத்திரம்தான் பெரிய அளவில் பாராட்டைப் பெற்றது. அதுபோல நம் கதாபாத்திரம் அமைந்துவிடக் கூடாது என ஹீரோ கதாபாத்திரத்தை நிராகரித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் விஜய் ஆண்டனியின் 'மழை பிடிக்காத மனிதன்' படம் ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது!

ஆங்கிலத்தில் ஏ ஐ தொழில்நுட்பம் மூலமாக டப் ஆகும் சிம்புவின் சூப்பர் ஹிட் திரைப்படம்!

நேர்காணல் கேட்ட சன் டிவி… நோ சொன்ன விஜய்- இதனால்தான் கோட் வியாபாரம் கைமாறியதா?

தசாவதாரம் படத்தில் தான் செய்த சாதனையை இந்தியனில் முறியடிக்கும் கமல்ஹாசன்!

ரகுல் ப்ரீத் சிங்கின் கணவருக்கு 250 கோடி ரூபாய் நஷ்டம்.. சொத்துகளை விற்ற சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments