Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடாமுயற்சி இந்த தேதியில் கண்டிப்பாக ரிலீஸ் ஆகவேண்டும்- அஜித் போட்ட கண்டீஷன்!

vinoth
திங்கள், 24 ஜூன் 2024 (07:40 IST)
அஜித் இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி மற்றும் ஆதிக் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ ஆகிய திரைப்படங்களில்  நடித்து  வருகிறார். விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களாக லைகா நிறுவனத்தின் பொருளாதார பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

அதனால் அஜித் ஆதிக் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடிக்க தொடங்கினார்.  இந்நிலையில் இப்போது விடாமுயற்சி ஷூட்டிங் மீண்டும் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக ஜூன் 20 ஆம் தேதி படக்குழு அஜர்பைஜானுக்கு சென்றது. அங்கு அஜித், திரிஷா மற்றும் ரெஜினா சம்மந்தப்பட்ட காட்சிகளை அங்கு படமாக்க உள்ளார்களாம்.

இந்நிலையில் படக்குழுவினர் ஏற்கனவே அஸர்பைஜானுக்கு சென்றுவிட்ட நிலையில் அஜித் நேற்று முன் தினம் அஸர்பைஜானுக்கு சென்றார். அங்கு இப்போது பல ஸ்டண்ட் கலைஞர்களோடு அவர் மோதும் ஆக்‌ஷன் காட்சியை எடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தொடர்ச்சியாக இந்த படத்தில் நடித்து முடிக்கவுள்ள அஜித், படத்தை எப்படியாவது தீபாவளிக்கு ரிலீஸ் செய்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளாராம்.

இயக்குனர் மகிழ் திருமேனியும் பக்காவாக திட்டமிட்டு மொத்தமாக 40 நாட்களில் ஷூட்டிங்கை முடிக்கவுள்ளாராம். ஏற்கனவே எடுத்தக் காட்சிகளையும் எடிட் செய்து தயார் செய்துவைத்துவிட்டாராம். அதனால் தயாரிப்பு நிறுவனம் சரியான ஒத்துழைப்புக் கொடுத்தால் திட்டமிட்ட படி தீபாவளிக்கு அந்த படத்தை ரிலீஸ் செய்துவிடுவதில் அவரும் உறுதியாக இருக்கிறாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கொள்ளையழகு… பிள்ளை முகம்.. கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

வெண்ணிற சேலையில் தேவதை போல ஜொலிக்கும் வாணி போஜன்!

லக்கி பாஸ்கர் படத்தின் இரண்டாம் பாகம் வருமா?... இயக்குனர் வெங்கட் அட்லூரி பதில்!

திடீரென்று அமீர்கான் அப்டேட் விட்ட கூலி… பின்னணியில் வட இந்திய பிஸ்னஸ் சிக்கல் இருக்கா?

மீண்டும் மீண்டுமா?... கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட ‘காத்தி’ ரிலீஸ் தேதி!

அடுத்த கட்டுரையில்
Show comments