Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜீத்தின் கட்அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்யும் ஆர்யா

Webdunia
புதன், 5 ஆகஸ்ட் 2015 (11:13 IST)
யட்சன் படத்தில் ஆர்யா அஜீத்தின் ரசிகராக வருகிறார் என்பது, படப்பிடிப்பில் இருக்கும்போதே தெரிந்ததுதான். அஜீத் வாழ்க என்று கோஷம் போடுவதுடன், அஜீத் ரசிகர் என்பதை கடந்து போவார்கள் என்றுதான் அனைவரும் நினைத்திருந்தனர். ஆனால், படத்தின் ட்ரெய்லர் அப்படியில்லை என்று சொல்கிறது.
யட்சன் படத்தின் ட்ரெய்லர் ஆரம்பித்ததுமே அஜீத் புகழ்தான். மூணு நாள்ல தல படம் ரிலீஸ். தாரை தப்பட்டை அடிச்சு நொறுக்கணும்யா என்று ஆர்யா கூற, அடுத்து வரும் காட்சியில் ஆஜீத்தின் ஆகாச அளவு கட்அவுட்டில் ஏறி பாலாபிஷேகம் செய்கிறார்.
 
தமிழ் சினிமாவில் சிம்பு, ஆர்யா, ஜெய், பிரேம்ஜி, வெங்கட்பிரபு, விஷ்ணுவர்தன், வைபவ் என்று அஜீத் ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டே போகிறார்கள். அதன் விளைவுதான் இந்த காட்சிகள்.
 
சரி, யட்சன் என்றால் என்ன பொருள்? குபேரன் என்று அர்த்தமாம். பேசாமல் ரசிகன் என்று வைத்திருக்கலாம்.

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

Show comments