Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அஜீத் கட் அவுட்டுக்கு ஆர்யா பாலாபிஷேகம்

அஜீத் கட் அவுட்டுக்கு ஆர்யா பாலாபிஷேகம்
, வெள்ளி, 21 நவம்பர் 2014 (11:40 IST)
விஷ்ணுவர்தன் இயக்கும் யட்சன் படத்தில் அஜீத் ரசிகர் மன்றத் தலைவராக ஆர்யா நடிக்கிறார். வீரம் பட கட்அவுட்டுக்கு அவர் பாலாபிஷேகம் செய்யும் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது.
 
ஆரம்பம் படத்துக்குப் பிறகு விஷ்ணுவர்தன் தொடங்கிய படம் யட்சன். ஆர்யா, விஷ்ணுவர்தனின் தம்பியும் நடிகருமான கிருஷ்ணா இருவரும் யட்சனில் இணைந்து நடிக்கின்றனர். தீபா சன்னிதி ஹீரோயின்.
 

 
வார இதழில் சுபா எழுதிய தொடர்கதையில் சின்னச் சின்ன மாற்றங்கள் செய்து இந்தப் படத்தை எடுக்கின்றனர். யுடிவியும், விஷ்ணுவர்தனும் இணைந்து படத்தை தயாரிக்கின்றனர்.
 
கதைப்படி ஆர்யா அஜீத்தின் ரசிகர். அவரது வீரம் பட கட்அவுட்டுக்கு ஆர்யா பாலாபிஷேகம் செய்த காட்சியை சமீபத்தில் படமாக்கினர்.
யட்சன் வெளியாகும் போது திரையரங்கு அஜீத் ரசிகர்களால் நிறையப் போகிறது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.

Share this Story:

Follow Webdunia tamil