Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அஜீத் ரியல் சூப்பர் ஸ்டார் - அருண் விஜய் பேச்சால் மீண்டும் சர்ச்சை

அஜீத் ரியல் சூப்பர் ஸ்டார் - அருண் விஜய் பேச்சால் மீண்டும் சர்ச்சை
, சனி, 11 அக்டோபர் 2014 (15:01 IST)
சூப்பர் ஸ்டார் என்பது பொதுவான பட்டம். ஒரு துறையில் யார் சிறந்தவர்களாக இருக்கிறார்களோ அவர்களை சூப்பர் ஸ்டார் என்று அழைப்பது வழக்கம். சினிமாவில் யாருக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்களோ, யாருடைய படம் அதிக கலெக்ஷனை பெறுகிறதோ அவர் சூப்பர் ஸ்டார். சில மொழிகளில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களை சூப்பர் ஸ்டார் அடைமொழியில் குறிப்பிடுவதுண்டு.
 
தமிழகத்தைப் பொறுத்தவரை ரஜினியைத் தவிர வேறு யாரையும் ரசிகர்கள் சூப்பர் ஸ்டாராக ஏற்றுக் கொண்டதில்லை. அடுத்த சூப்பர் ஸ்டார் என வாரப்பத்திரிகை ஒன்று விஜய்யை முன்னிறுத்தி அது சர்ச்சையானது ஊருக்கே தெரிந்த விஷயம். இந்நிலையில் நடிகர் அருண் விஜய் மீண்டும் சூப்பர் ஸ்டார் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
கௌதம் இயக்கத்தில் அஜீத் நடித்துவரும் படத்தில் அருண் விஜய் வில்லனாக வருகிறார். படப்பிடிப்பில் அஜீத்துடன் ஏற்பட்ட தனது அனுபவங்களை ட்விட்டரில் பகிர்ந்து கொண்ட அவர், அஜீத்துடன் இப்போதுதான் நெருங்கி பழகுகிறேன். அவர் போலியாக எதையும் செய்வதில்லை. அவரது ஒவ்வொரு செயலையும் நேசிக்கிறேன். அவர் ரியல் சூப்பர் ஸ்டார் என குறிப்பிட்டிருந்தார்.
 
ரஜினி இருக்கையில் அஜீத்தை எப்படி சூப்பர் ஸ்டார் என்று கூறலாம் என சில ரஜினி ரசிகர்கள் ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் அருண் விஜய்க்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil