Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித்தின் ’வலிமை’ படத்தில் நான்கு ஹீரோயின்கள்: வெளிவராத தகவல்

Webdunia
புதன், 20 நவம்பர் 2019 (22:59 IST)
அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாக உள்ள ’வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் இரண்டாம் வாரத்தில் தொடங்க உள்ளது என்று செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன 
 
இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும், இதனை அடுத்து அவர் சமீபத்தில் போனிகபூரை சந்தித்ததாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் இந்த படத்தில் மேலும் மூன்று நாயகிகள் நடிக்க உள்ளார்களாம். அவர்கள் நிக்கிகல்ராணி, யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது
 
சர்வதேச தீவிரவாதி ஒருவனை பிடிக்க தமிழக போலீஸ் சார்பில் ஒரு டீம் அமைக்கப்படுவதாகவும் அந்த போலீஸ் டீமின் அஜித் தலைமையிலான மொத்தம் ஆறு பேர் இருப்பதாகவும் அதில் நான்கு பேர் பெண்கள் என்றும் கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது 
 
அஜித்துடன் நடிக்கும் நான்கு நாயகிகள் முடிவாகிவிட்ட நிலையில் இன்னும் ஒரு பிரபல நடிகரை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறதாம். அனேகமாக அர்ஜூன் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
 
அதேபோல் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ரேஸ்கள் என விறுவிறுப்பான சண்டைக் காட்சிகள் என முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக இந்தப் படம் இருக்கும் என்றும் சென்டிமெண்ட் மட்டும் ரொமான்ஸ்க்கு இந்த படத்தில் வேலையே இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திரைப்படமாகிறது மேகாலயா ஹனிமூன் கொலை: ராஜா குடும்பத்தினர் சம்மதம்.. டைட்டில் அறிவிப்பு..!

40 கோடி சப்ஸ்க்ரைபர்களை தாண்டிய Mr.Beast! நேராக வீட்டுக்கு சென்று பரிசளித்த Youtube CEO!

சிம்பு படம் டிராப்.. மீண்டும் சூர்யாவுடன் ஒரு படம் இயக்கும் வெற்றிமாறன்.. ஆனால் வாடிவாசல் இல்லை.. குழம்பும் ரசிகர்கள்..!

ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காம் அஜித் நடிக்கிறாரா? ஆச்சரிய தகவல்..!

ரூ.15 கோடி பட்ஜெட்.. வசூல் ரூ.4 கோடி தான்.. எதிர்பார்த்த வசூலை பெறாத ‘மாரீசன்’..!

அடுத்த கட்டுரையில்
Show comments