Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘அவதூறுகளுக்குத் தயாராக இருங்கள்… அஜித் சார் இதைதான் சொன்னார்’ – மகிழ் திருமேனி சொன்ன சம்பவம்!

vinoth
புதன், 29 ஜனவரி 2025 (10:36 IST)
அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. படத்தில் அஜித்தோடு, அர்ஜுன், ஆர்வ, த்ரிஷா, ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற அனிருத் இசையமைக்கிறார். ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் பிப்ரவரி 6 ஆம் தேதி ரிலீஸாகிறது.

படத்துக்கான ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வரும் இயக்குனர் மகிழ் திருமேனி படம் என்ன மாதிரியாக இருக்கும் என்பது குறித்து ரசிகர்களுக்கு தொடர்ந்து தகவல்களைக் கொடுத்து வருகிறார். அதில் “படத்தில் பன்ச் வசனங்கள் இருக்காது. அதே போல பிரம்மாண்டமான கதாநாயக அறிமுகக் காட்சி இருக்காது. மாஸ் இடைவேளைக் காட்சி இருக்காது. ஆனால் ஒட்டுமொத்தமாக படம் அனைவரும் திருப்தியடையும்படி மிகச்சிறப்பாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

மேலும் படம் குறித்து பரவிய எதிர்மறையான தகவல்கள் குறித்து பேசியுள்ள அவர் “இந்த படத்தில் நான் ஒப்பந்தம் ஆகும் போதே அஜித் சார் என்னிடம் சொன்னார். அவதூறுகளுக்குத் தயாராகுங்கள். உங்களை யாரெல்லாம் தூக்கி வைத்துப் பேசினார்களோ அவர்களோ கீழே தள்ளி விடப் போகிறார்கள்” என்று சொன்னார். அது எனக்கு முதலில் புரியவில்லை. ஆனால் அவரின் பேச்சுக்கான அர்த்தம் எனக்குப் பின்னர்தான் புரிந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீலாம்பரி போல கால் மேல் கால் போட்டு ஸ்டைலிஷ் லுக்கில் போட்டோஷூட் நடத்திய மாளவிகா மோகனன்!

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட்!

விஜய்யைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் படத்திலும் அதை செய்திருக்கிறேன்… முருகதாஸின் செண்ட்டிமெண்ட் பலன் கொடுக்குமா?

காந்தாரா 2 படத்துக்கு நூறு கோடி ரூபாய் விலை சொல்லும் தயாரிப்பாளர்கள்… தெலுங்கு திரையுலகம் அதிர்ச்சி!

KGF புகழ் தினேஷ் மங்களூரு காலமானார்… ரசிகர்கள் அஞ்சலி!

அடுத்த கட்டுரையில்
Show comments