Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித் 64 படத்தை இயக்குகிறாரா கே ஜி எஃப் இயக்குனர்? இணையத்தில் பரவிய வதந்தி!

vinoth
செவ்வாய், 23 ஜனவரி 2024 (09:58 IST)
அஜித் தன்னுடைய 62ஆவது படமான விடாமுயற்சி படத்தில் இப்போது கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்.  இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தபடத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களாக வெளிநாடுகளில் நடந்து வருகின்றன.

இதையடுத்து அஜித் நடிக்கும் அடுத்த படத்தை இளம் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை தெலுங்கின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்துக்கு இசையமைப்பாளராக ஜி வி பிரகாஷ் ஒப்பந்தம் ஆகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த இரு படங்களையும் முடித்துவிட்டு அடுத்து அஜித் நடிக்கவுள்ள அஜித் 64 ஆவது படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகின. ஆனால் விசாரிக்கையில் அந்த தகவல்களில் உண்மை எதுவும் இல்லை என்றும் அது சம்மந்தமாக எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’பாரதி கண்ணம்மா’ நடிகைக்கு நிச்சயதார்த்தம்.. குவியும் ரசிகர்களின் வாழ்த்துக்கள்..!

‘கருடன்’ பட நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் சிம்ரன்.. ஹீரோயின் சப்ஜெக்ட் படமா?

வெற்றிமாறனுக்காக இணைந்த ஜிவி பிரகாஷ் - சைந்தவி.. ஆச்சரியமான தகவல்..!

இனிது இனிது ஏகாந்தம் இனிது… கடற்கரையில் தனிமையாய் ஆண்ட்ரியா!

நஸ்ரியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments