Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்ப்ரைஸாக வந்த அஜித் 62 பட அப்டேட்… செம்ம மோட்டிவேஷனலான டைட்டில்!

Webdunia
திங்கள், 1 மே 2023 (06:42 IST)
துணிவு படத்துக்குப் பிறகு அஜித் நடிக்கும் அவரின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டு மகிழ் திருமேனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான வேலைகளை மகிழ் திருமேனி இப்போது செய்து வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படாமல் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக அஜித் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் மே மாதம் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ,மே 1 ஆம் தேதி அஜித் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டது.

அதுபோலவே இன்று நள்ளிரவு 12 மணிக்கு படத்தின் டைட்டில் ‘விடாமுயற்சி என அறிவிக்கப்பட்டு படத்தை மகிழ் திருமேனி இயக்குவதாகவும், அனிருத் இசையமைப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளியாகியுள்ள போஸ்டர் இணையத்தில் அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்து அவர்களை திக்குமுக்காட செய்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அழகிய உடையில் கேட்வாக் போஸ் கொடுத்த மிருனாள் தாக்கூர்!

வித்தியாசமான காஸ்ட்யூமில் க்யூட்டான போஸ் கொடுத்த ஸ்ரேயா!

அடுத்தடுத்து மாஸ் படங்களில் கமிட்டாகும் சாய் அப்யங்கர்… சிம்பு படத்துக்கும் அவர்தானாம்!

தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்களின் எண்ணிக்கைக் குறைவு.. பேட் கேர்ள் சர்ச்சை குறித்து மிஷ்கின் பேச்சு!

என்னுடைய காதலர் இவர்தான்.. காதலர் தினத்தில் அறிவித்த பிக்பாஸ் ஜாக்குலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments