Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடாமுயற்சி கைவிடப்படுகிறதா?... அஜித் ரசிகர்களை அப்செட் ஆக்கிய தகவல்!

Webdunia
திங்கள், 21 ஆகஸ்ட் 2023 (07:31 IST)
அஜித் தன்னுடைய 62ஆவது படமான விடாமுயற்சி படத்தில் இப்போது கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்.  இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தபடத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் இன்னும் அடுத்த கட்ட பணிகள் நடக்கவில்லை. ஷூட்டிங் எப்போது என்பதும் தெரியவில்லை.

ஷூட்டிங் தொடங்கும் நாளுக்காக காத்திருந்து காத்திருந்து அஜித் ரசிகர்கள் அப்செட் ஆகி வலிமை அப்டேட் போல விடாமுயற்சி அப்டேட்டை செல்லும் இடமெல்லாம் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்நிலையில் கடந்த சில தினங்களாக இந்த படம் கைவிடப்பட உள்ளதாக தகவல்கள் தீப்போல பரவின.

ஆனால் அப்படி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது. ஏனென்றால் படத்தின் ஓடிடி உரிமை முன்பே நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு விற்கப்பட்டு முன்பணம் வாங்கப்பட்டு விட்டதாம். அதனால் படத்தைக் கைவிடுவதற்கு சாத்தியங்கள் இல்லை என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ALTT, ULLU உள்ளிட்ட 24 ஆபாச OTT தளங்களுக்கு தடை! - மத்திய அரசு அதிரடி!

கிளாமர் உடையில் ரகுல் ப்ரீத் சிங்கின் கார்ஜியஸ் புகைபடத் தொகுப்பு!

வித்தியாசமான உடையில் க்யூட் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் மோகன்லால்?...

கூலி படத்தில் மட்டும்தான் எனக்கு அந்த அழுத்தம் இல்லை.. பிளாஷ்பேக் பரிசோதனை.. மனம் திறந்த லோகேஷ்!

அடுத்த கட்டுரையில்
Show comments