Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கதாநாயகி இல்லாமலேயே தொடங்கும் அஜித் 62 பட ஷூட்டிங்!

Webdunia
திங்கள், 16 ஜனவரி 2023 (10:14 IST)
அஜித் 62 படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது. இன்னும் இந்த படத்தின் கதாநாயகி முடிவு செய்யப்படவில்லை.

துணிவு படத்தின் ரிலீஸுக்கு முன்னதாகவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் அடுத்து நடிக்க உள்ள அஜித் 62 ஆவது படத்தின் அறிவிப்பு வெளியாகி ரசிகர்களுக்கு டபுள் டிரீட்டாக அமைந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் வெளியான அப்டேட்டின்படி ‘அஜித்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்த படம் ஜனவரி இறுதியில் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இப்போது அவரை நீக்கிவிட்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இன்னமும் கதாநாயகி யார் என்பது முடிவாகவில்லை. ஆனால் இப்போது கதாநாயகியை முடிவு செய்யாமலேயே முதல் கட்ட ஷூட்டிங்கை விக்னேஷ் சிவன் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அமலாபாலுக்கு ஆண் குழந்தை.. இன்ஸ்டாவில் வெளியிட்ட க்யூட் வீடியோ..!

’புஷ்பா 2’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி.. ‘தங்கலான்’ படத்திற்கு வழிவிட்டதால் ரஞ்சித் மகிழ்ச்சி..!

நடிகை வேதிகாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பச்சை நிற உடையில் க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

துருவ் விக்ரம்மை ரொமாண்டிக் ஹீரோவாக மாற்றப் போகும் சுதா கொங்கரா!

அடுத்த கட்டுரையில்
Show comments