Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜிப்ரான் vs அனிருத்… அஜித் 61 இசையமைப்பாளர் யார்?

Webdunia
புதன், 12 ஜனவரி 2022 (15:51 IST)
அஜித் 61 படத்துக்கு இசையமைக்க போவது யார் என்ற கேள்வி ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது.

அஜித் ஹெச் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தை அடுத்து இருவரும் மீண்டும் மூன்றாவது முறையாக இணைகின்றனர். இந்த படத்தையும் போனி கபூரே தயாரிக்கிறார். வலிமை ரிலீஸுக்கு பின் இதற்கான வேலைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்போது இந்த படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் இசையமைப்பாளராக பணிபுரிய அனிருத்திடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக முதலில் செய்திகள் வெளியாகின. ஆனால் இப்போது ஜிப்ரான் அந்த படத்துக்கு இசையமைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இசையமைப்பாளர் குறித்து ஆடியோ நிறுவனத்துக்கும் இயக்குனர் வினோத்துக்கும் கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அஜித் 61 படத்தின் இசை உரிமையை வாங்க உள்ள சோனி நிறுவனம் அனிருத்தைக் கைகாட்ட, வினோத்தோ ஜிப்ரான்தான் வேண்டும் என்று உறுதியாக இருக்கிறாராம். அதனால் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படாமல் உள்ளதாம்.

தொடர்புடைய செய்திகள்

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

அடுத்த கட்டுரையில்
Show comments