Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரீமேக் அல்ல –வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர்

Webdunia
வியாழன், 15 நவம்பர் 2018 (08:09 IST)
நடிகர் அஜித் நடிக்கும் அடுத்த படததை இயக்கும் இயக்குனர் அந்த படம் குறித்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

நடிகர் அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கும் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் பணிகளை முடித்துள்ளார். விஸ்வாசம் படம் பொங்கலுக்கு ரிலீஸாவதை அடுத்து அஜித் அடுத்ததாக சதுரங்க வேட்டை மற்றும் தீரன் ஆகிய படங்களின் இயக்குனர் ஹெச் வினோத் இயக்கும் படத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளார். இந்த படத்தினை மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க இருக்கிறார்.

இந்த படம் பற்றிய அறிவிப்பு வந்த நாட்களில் இருந்தே படம் பற்றிய பல வதந்திகள் கோலிவுட் காற்றில் கலந்து பரவத் தொடங்கிவிட்டன. அதில் முக்கியமான ஒரு வதந்தி இந்த படம் கடந்த ஆண்டு அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றி பெற்ற பிங்க் படத்தின் ரீமேக் என்பது. கிட்டத்தட்ட கோலிவுட் முழுவதுமே இந்த தகவலை உண்மை என நம்பியிருந்த நிலையில் தற்போது அதை மறுத்துள்ளார் இயக்குனர் ஹெச் வினோத். இதை தனது டிவிட்டரில் அவர் பகிர்ந்துள்ளார்.

இந்த அறிவிப்பு அவர் அஜித் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூரை சமீபத்தில் சென்னையில் சந்தித்ததின் பின் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. இப்போதைக்கு இந்த படத்தில் கதாநாயகன் மற்றும் இயக்குனருக்கு அடுத்த படியாக இசையமைப்பாளராக ஏ.ஆர்,ரஹ்மான் ஒப்பந்தமாகி உள்ளார் என்பது மட்டுமே அதிகாரப்பூர்வ தகவல்.

தொடர்புடைய செய்திகள்

கோட் படத்தின் சேட்டிலைட் பிஸ்னஸில் சொதப்பிய தயாரிப்பு நிறுவனம்… 30 கோடி நஷ்டம்?

தென்காசியில் தொடங்கிய விடுதலை 2 ஷூட்டிங்!

படை தலைவன் படத்துக்குப் பிறகு பிரபல இயக்குனர் படத்தில் சண்முக பாண்டியன்!

அஜித் சிறுத்தை சிவா படத்தில் இருந்து வெளியேறுகிறதா சன் பிக்சர்ஸ்?

கைவிட்ட சூர்யா... விக்ரம் பக்கம் செல்லும் சுதா கொங்கரா!

அடுத்த கட்டுரையில்
Show comments