ரஜினியின் லால் சலாம் படத்துக்கான இசைப் பணிகளை தொடங்கிய இசைப்புயல்… வைரல் வீடியோ!

Webdunia
சனி, 26 நவம்பர் 2022 (09:35 IST)
ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் லால் சலாம் படத்தை அவரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க உள்ளார்.

ஐஸ்வர்யா இயக்கும் புதிய படமான லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் ஒரு கௌரவ வேடத்தில் நடிக்கிறார். இதுபற்றி தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் கதாநாயகன்களாக விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடிக்கின்றனர். ரஜினிகாந்த் கடைசியாக குசேலன் மற்றும் ரா ஒன் ஆகிய படங்களில் கௌரவ வேடத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்நிலையில் மும்பையில் இந்த படத்துக்கான இசைப் பணிகளை ஏ ஆர் ரஹ்மான் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். இது சம்மந்தமான வீடியோவை ரஹ்மான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர அது வைரல் ஆகி வருகிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேறுவது இந்த பெண் போட்டியாளரா? ரசிகர்கள் ஆச்சரியம்..!

அப்பாவ விட தெளிவா இருப்பாரு போலயே! ஜேசன் சஞ்சயை அசைக்க முடியாமல் திணறும் திரையுலகம்

காஜாமுகைதீன் தற்கொலை முயற்சி.. அஜித் காரணம் இல்ல.. உண்மையில் நடந்தது இதுதான்

அஜித்துக்கு 'ஜென்டில்மேன் ஓட்டுநர் ஆஃப் தி இயர் 2025' விருது.. இத்தாலி செய்த கெளரவம்..

ஒரு லட்சம் பேரா? மலேசியாவில் நடப்பது ஆடியோ லாஞ்ச் இல்ல.. விஜய்க்கு இதுதான் சரியான ஃபேர்வல்

அடுத்த கட்டுரையில்
Show comments