Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புஷ்பா படத்தில் நான் நடித்திருந்தால் இன்னும் சிறப்பாக பொருந்தி இருப்பேன்… ஐஸ்வர்யா ராஜேஷ் கருத்து!

Webdunia
புதன், 17 மே 2023 (08:46 IST)
ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது பல படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள பாத்திரங்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிப்பவர்களில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அவர், நடித்து சமீபத்தில் ரிலீஸ் ஆன  திரைப்படம் டிரைவர் ஜமுனா.

இதையடுத்து சமீபத்தில் ரிலீஸான அவரின் ஃபர்ஹானா திரைப்படம் சர்ச்சைகளுக்கு மத்தியில் ரிலீஸாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிக்காக ஆந்திராவுக்கு சென்றுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் புஷ்பா படத்தில் ராஷ்மிகாவுக்கு பதில் தான் நடித்திருந்தால் அந்த வேடத்துக்கு சிறப்பாக பொருந்தி இருப்பேன் எனக் கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் “புஷ்பாவில் ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தில் ராஷ்மிகா சிறப்பாக நடித்திருந்தார். ஆனால் நான் அந்த வேடத்தில் நடித்திருந்தால் சிறப்பாக பொருந்தி இருப்பேன்.” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'வசூல்ராஜா எம்பிபிஎஸ்' பட நடிகர் மரணம்? இணையத்தில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

அல்லு அர்ஜுன் & அட்லி இணையும் படத்தின் பட்ஜெட் இத்தனைக் கோடியா?

குட் பேட் அக்லிக்கு இருக்கும் எதிர்பார்ப்பு… முதல் நாளில் இத்தனைக் கோடி வசூலிக்க வாய்ப்பா?

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் ஸ்டன்னிங் க்யூட் போட்டோஷூட்!

இன்றிரவு 13 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வெப்பத்தில் இருந்து விடுதலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments